2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சற்றுமுன்னர் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவு 4 ஆயிரத்து 376 பில்லியன் என்பதோடு, துண்டுவிழும் தொகையாக 644 பில்லியன் ரூபாய் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.