பாராளுமன்றத்தினை அண்டிய பகுதியில் நேற்று(09) அதிக மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறி பாராளுமன்றிற்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்பப்டுகின்றது.
பாராளுமன்ற ஆரம்ப வேளையிலேயே 03 வினாக்களுக்கு விடையளிக்க உள்ளதால் காலதாமதிக்காது பாராளுமன்றிற்கு செல்ல வேண்டியுள்ள நிலையில், ராஜகிரிய பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வாகன நெரிசலில் இருந்ததாகவும், வாகனத்தில் இருந்து இறங்கி நனைந்தபடியே மோட்டார் சைக்கிளில் பாராளுமன்றிற்கு வருகை தந்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.