2.0 படத்தின் பின்னணி இசை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அவரது எரிச்சலை பாடகர் அட்னன் சமியின் குழந்தை மாற்றியுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது லண்டனில் 2.0 படத்தின் பின்னணி இசை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் ஹிந்தி திரையுலகை சேர்ந்த பின்னணி பாடகர் அட்னன் சமியின் ஒரு வயது பெண் குழந்தை தன் தந்தை போனில் இருந்து தவறுதலாக ரஹ்மானுக்கு வீடியோ அழைப்பு செய்துள்ளார்.
உடனே போனை எடுத்த ரஹ்மான் குழந்தையுடன் சிரித்துப் பேசி விளையாடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்த அட்னன் ’போனுக்கு பாஸ்வேர்டு போடும் நேரம் வந்துவிட்டது. என் குழந்தை மெடினா என் போனை எடுத்து ஏ.ஆர். ரஹ்மானுக்கு வீடியோ அழைப்பு செய்துவிட்டார்.
தொடர்ந்து லண்டனில் 2.0 படத்துக்கு இசையமைக்கும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை அவளுக்குச் சுற்றிக்காட்டினார்” எனப் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள ரஹ்மான்’அன்புள்ள அட்னன்… அவளின் வீடியோ கால் என் எரிச்சலான மனநிலையை பணிச் சுமைகளை மாற்றிவிட்டது. நன்றி மெடினா. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” எனப் பதிவிட்டுள்ளார். இருவரின் பதிவுகளும் சமூகவலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
