வட மேல் மாகாணசபையின் பதவிக்காலம் இன்று(10) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதுடன், குறித்த மாகாண சபையின் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு வழங்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் இதுவரையில் வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் 5 மாகாணங்களுக்கான ஆயுட்காலம் முடிவடைந்துள்ளது.
மேலும், இம்மாதம் 25 ஆம் திகதி வட மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடையவுள்ளதுடன், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி தென் மாகாணத்தினதும், 21 ஆம் திகதி மேல் மாகாணத்தினதும், செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி ஊவா மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாகவும்
தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, மாகாண சபை எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.