பப்புவா நியூகினியா மற்றும் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று(11) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனின் கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ராட்ச அலைகள் ஏற்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுடன்,சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தோனேஷியாவில் இன்று(11) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜவா மற்றும் பாலி தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

நிலநடுக்கம் காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.