அமெரிக்காவில் நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புருக்ளின் பகுதியில் உள்ள சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.
அதன்கீழ் பகுதியில் “என் மீது சிறுநீர் கழிக்கவும்” என எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்து வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், டிரம்ப் ஒரு ஜனாதிபதியாக செயல்படவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடாக அந்தச் சிலையை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புகைப்படங்கள் சில…





