களனி கங்கை மற்றும் கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு துரித செயற்திட்டமொன்று அவசியமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களனி கங்கை மற்றும் கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பாக நேற்று(12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கண்டறிவதற்காக குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, திட்ட அறிக்கையை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.