ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை அட்டவணையில் மாற்றம்…

எதிர்வரும் குளிர்காலத்திற்காக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை நேர அட்டவணையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவு இது தொடர்பாக தெரிவிக்கையில் எதிர்வரும் 28ம் திகதி முதல் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் வரையில் ஏ-330 விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 29ம் திகதி முதல் கொழும்பு மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் மேற்கொள்ளப்படும் விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

இதற்கமைவாக வாரத்தில் மேற்கொள்ளப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கை 17 இல் இருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது