ஐ.எஸ். தீவிரவாதப் போராட்டக் குழுவில் கைகோர்த்த முதல் இலங்கையறது மரணம் குறித்து ஆராய்வு

கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடியதாக தெரியவந்துள்ளது.
இவர் கலேவெல நகரில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் சுமார் இரண்டு வருடங்கள் அதிபராக கடமையாற்றியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் மக்கா நகர் செல்வதாகக் கூறி அதிபர் பதவியில் இருந்து விலகிச் சென்றுள்ளார்.

மேலும் இவரது இயற்பெயர் முஹம்மத் நிராம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு குறித்த அமெரிக்க படைகள் மேற்கொண்ட விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற ஐ.எஸ். வீடியோ மற்றும் தகவல்கள் முகப்புத்தகத்தினூடாக பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

“இவரது மரணத்தினை நாம் பத்திரிகை மூலமே அறிந்து கொண்டோம்” எனக் கூறிய கலேவெல நகரில் உள்ள சர்வதேச பாடசாலை உரிமையாளர் சஹாப்தீன் முஹமத் ஸாமிர் தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்;

சுமார் இரண்டு வருடங்கள் இப்பாடசாலையில் அதிபராக கடமையாற்றினார். கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் அவரது பெற்றோருடன் மக்கா நகர் செல்வதாகக் கூறி அதிபர் பதவியில் இருந்து விலகிச் சென்றார், அதுவே இறுதியாக நம்முடம் பேசியது எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் ஸாமிர் தெரிவிக்கையில்; குறித்த நபர் கொழும்பில் திருமணம் முடித்துள்ளதோடு அவரது பிறந்த ஊர் வெறேள்ளேகம, கண்டி எனவும் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த கொலை செய்யப்பட நபருக்கு 6 குழந்தைகள் இருப்பதாகவும் அவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவரென கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டத்தைப் பெற்ற அவர், அராபி, உருது, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் சரளமாக உரையாடக்கூடியவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அதிபராக பணியாற்றிய குறித்த சர்வதேச பாடசாலையில் இருந்து எந்தவித தடயங்கள் ஆவணங்களையும் பெறமுடியவில்லை. அனைத்தையும் அவர் அகற்றிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. குறிப்பாக அவரது கையெழுத்து உள்ள ஒரு ஆவணம் கூட அப்பாடசாலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(riz)