மின்சாரத்திற்கும் விலைச் சூத்திரம்!!!

மின்சாரத்திற்காக விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறித்த நடவடிக்கை தொடர்பில் மின்சார சபையின் பிரதானிகள் மற்றும் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டு வருவதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜயலால் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மின்சார சபையானது நட்டத்தில் இயங்குவதாகவும், அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைச் சூத்திரத்தினால் மின்சார அலகுகள் 30 அல்லது 60 வரையில் சலுகை வழங்கப்பட்டு அதற்கு மேலதிகமாக பாவிக்கப்படும் ஒவ்வொரு மின் அலகுக்கும் குறித்த விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ஆதலால் மின் கட்டணப் பட்டியலில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும், தற்போது வீடுகளுக்கு டிஜிட்டல் மின்சார மீட்டர்களை பொருத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாகவும், அவ்வாறு  பொருத்தியதன் பின்னர் மின்சார கட்டணப் பட்டியல்கள் கணணி மூலம் கணிக்கப்பட்டு தபாலில் வீடுகளுக்கு அனுப்புவதற்கும் திட்டமிட்டு வருவதாகவும் ரஞ்சித் மேலும் தெரிவித்திருந்தார்.