மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு…

மழையுடனான காலநிலை காரணமாக அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தக்காளி, கறிமிளகாய், லீக்ஸ் உள்ளிட்ட சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மேலும் கூறியுள்ளது.

அதேவேளை, சுமார் 60 வீத மரக்கறிகள் மழையினால் அழிவடைந்துள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.