உணவுகள் அதிகளவு வீணாக்கப்படும் இடமாக பதியப்பட்டது பாராளுமன்றம்…

நாட்டில் அதிகமாக உணவு வீண்விரயம் செய்யப்படும் இடமாக பாராளுமன்றம் காணப்படுகின்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(16) நடைபெற்ற உலக ஆகார தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

“..எமது நாட்டில் உணவுகளை அதிகமாக வீணாக்கும் இடம் பாராளுமன்றம் ஆகும். இது நாம் அனைவரும் அறிந்த விடயம். சில எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இல்லை. சிலர் இருந்தாலும் பாராளுமன்ற உணவை சாப்பிடுவதில்லை. பாராளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் பாரியளவிலான உணவுகள் எஞ்சுகின்றன.

நான் கடந்த 27 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்ததனாலும், தற்போதும் போய்வருவதனாலும் இது குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளேன்…”  என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.