கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டது…

உருகுவேயைத் தொடர்ந்து கனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே சட்டப்பூர்வமாக போதை மருந்தை பொழுதுப்போக்கு பயன்பாட்டிற்காக மருந்து கடைகளில் கிடைக்க அனுமதிக்கும் முதல் நாடாக தென் அமெரிக்க நாடான உருகுவே மாறியது.

இந்நிலையில் கனடாவும் கஞ்சா(cannabis) விற்பனையை சட்டப்பூர்வமாக்கியது. நேற்று நள்ளிரவு முதல் பொழுதுப்போக்கு பயன்பாட்டிற்காக கஞ்சா கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூபவுண்ட்லேண்ட், லேப்ராடார் ஆகிய மாகாணங்களில் அதிகாரப்பூர்வமாக கஞ்சா விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.