முத்துராஜவல பகுதியில் அண்மையில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கையானது நாரா (NARA) நிறுவனத்தால் கனிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த எண்ணெய் கசிவால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதற்காக செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நாரா நிறுவனத்தின் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 08ம் திகதி முத்துராஜவல எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் எரிபொருள் கசிவு ஏற்பட்டதுடன், இதனால் எண்ணெய் படலங்கள் திக்ஓவிட்ட பகுதியில் இருந்து உஸ்வெட்டகெய்யாவ கடற்கரை ஓரங்களில் படிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.