யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று(17) சுகாதாரப் பிரிவினர் குறித்த கல்லூரியில் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, உடனடியாக மாணவர்களை வெளியேற்றுமாறு கல்லூரி நிர்வாகத்தினருக்கு சுகாதரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து,காய்ச்சலுக்கு உட்பட்ட மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதாரத்தை சரியான முறையில் பேணாத காரணத்தால் மாணவர்களுக்கு வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது