ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமருக்கு இடையே தொலைபேசி கலந்துரையாடல்…!!!

ஜனாதிபதி மைத்த்ரிபால மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று நேற்று(17) மாலை இடம்பெற்றதாகவும் இதன்போது இந்த விடயம் குறித்து இருவரும் தெளிவுப்படுத்திக் கொண்டதாகவும் ஜனாதிபதி அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ‘ரோ’ அமைப்பானது தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டிருந்ததாக ‘த ஹிந்து’ செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டிருந்த ஊடக அறிக்கையில், இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பாதிக்கும் நோக்கிலும் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அத்துடன் குறித்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்திய உளவுத்துறையின் எந்தவொரு ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.