மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்திய நடிகை… (photo)

சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படங்களில் நடித்திருப்பவர் நடிகை பிரணிதா. இவர் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: பெங்களூரில் உள்ள உள்ளூர் அரசு பள்ளியில் தன்னார்வலராக 7ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தினேன். அப்போது அந்த பள்ளியின் சூழல்பற்றி எனக்கு தெரியவந்தது. தற்போது அப்பள்ளியை நான் தத்தெடுத்திருக்கிறேன்.

அரசு பள்ளியை காத்து மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த இந்த ஆண்டு தொடக்கத்தில் சில தன்னார்வலர்கள் முன்வந்தனர். அவர்களுடன் நானும் இணைந்து இப்பணியை மேற்கொண்டிருக்கிறேன்.

இந்த பள்ளியின் தேவைகளை நிறைவேற்ற தற்போதைக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கியிருக்கிறோம். மாணவிகளுக்கான கழிவறை வசதி உள்ளிட்டவையும் இதில் நிறைவேற்றப்படும். இதுபோன்ற உதவி செய்ய மேலும் பலர் முன்வந்திருக்கிறார்கள்’ என்றார்.

Image result for pranitha subhash teach in school

Image result for pranitha subhash teach in school

Image result for pranitha subhash teach in school