தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன நுழைவாயிலில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் மத்துகம – அளுத்கம வீதியில், மத்துகம முதல் வெலிப்பன்ன வரையிலான வீதி அபிவிருத்திப் பணிகள் 80% நிறைவடைந்துள்ளதாக வீதிப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
குறித்த அபிவிருத்திக்காக 2,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.