நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
சில இடங்களில் குறிப்பாக மத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் (குறிப்பாக வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில்) சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.