புகையிரதத்துடன் மோதியதில் 2 யானைகள் உயிரிழப்பு…

பளுகஸ்வெவ மற்றும் கல்ஓயாவிற்கு இடையில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் யானையொன்று மோதியதில், யானை உயிரிழந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மார்க்கத்தினூடான புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கல்கமுவ மீ ஓய பாலத்திற்கு அருகில் ரயிலுடன் மோதி யானையொன்று உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு யானை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடனேயே இவ்வாறு காட்டு யானைகள் மோதியுள்ளன.