மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதால் புகையிரத சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரகொல்லவெவ – கோன்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று(22) அதிகாலை 3 மணியளவில் குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதனால் கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் மஹவ புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.