சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தமது கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட குறித்த இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதுவரையில், ரங்கன ஹேரத் டெஸ்ட் போட்டிகளில் 415 வீக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.