இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் சேர்ந்து கூட்டாட்சியான நல்லாட்சி அரசினை உருவாக்கி இருந்த போதிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே வாக்குவாதங்கள் முரண்பாடுகள் இருந்து வருகின்றமை இரகசியமன்றே…
அண்மையிலும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே முறுகல் நிலைகள் தோன்றி இருந்தன, அது கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆகும். அது கொழும்பு துறைமுகத்தினை இந்தியாவுக்கு விற்கும் திட்டத்திற்காகும்.
இதனிடேயே, ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சம்பவம் ஒன்று நேற்று(22) பதிவாகியுள்ளது. அது சேனாநாயக்கவின் நினைவு விழாவில் கலந்து கொண்ட போதே ஆகும். அங்கு உரையாற்றும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைகளையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில்;
“2014 நவம்பர் மாதம் ராஜபக்ஷ அரசிலிருந்து வெளியேறி பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒன்று சேரும் போது நான் நினைத்தேன், டீ.எஸ். இனது டட்லியினது கட்சிக்கு தான் நான் சேர்ந்தேன் என்று… ஆனால் டீ.எஸ் இனது டட்லி இனது ஐக்கிய தேசியக் கட்சி இதுவல்ல என்பது இப்போது தான் புரிகிறது…” எனத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறுகையில்; டீ.எஸ், டட்லி மற்றும் எப்.ஆர்.சேனாநாயக்க ஆகியோரது சரிதையில் ஊழல், மோசடி, களவு மற்றும் வீண்விரயம் இல்லாது இருந்ததாகவும், அன்றைய காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியானது சக்திவாய்ந்த கட்சியாக விளங்கியதாகவும் தெரிவித்திருந்தார்.