மாத்தறை இலிருந்து கதிர்காமம் வரையில் நிர்மாணிக்கப்படவுள்ள ரயில்வே வீதியின் முதல் கட்ட பணிகளான 26 கி.மீ. வரையிலான மாத்தறை – பெலிஅத்த ரயில்வே வீதியானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ம் திகதி நிறைவுக்கு வரும் என பிரதான ஒப்பந்த நிறுவனமான சீன மெஷினரி இம்போர்ட் எக்ஸ்போர்ட் கோர்ப்பரேடிவ் (china machinery import and export corporation ) நிறுவனமானது ரயில்வே திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த ரயில்வே வீதியின் தரத்தினை பரிசீலிக்க ரயில்கள் பயணித்து ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் எதிர்வரும் வருடம் முதல் மக்கள் பாவனைக்காக வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக சீனா எக்ஸ்சிம் வங்கியானது நிதி வழங்கலின் கீழ் 278.2 மில்லியன் அமெரிக்கா டொலர்களை செலவிட்டு குறித்த அபிவிருத்தியினை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.