டக்வத் லுயிஸ் முறையில் இலங்கை அணிக்கு வெற்றி…

இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று(23) இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் டக்வத் லுயிஸ் முறையில் 219 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 366 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 26.1 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

இதன் படி , இலங்கை அணி 219 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.