உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் எஸ்.ஜயவர்தனவை நியமிக்க அமைச்சரவை நேற்று(23) தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் 32 வருட அனுபவம் கொண்ட அதிகாரியான சிறிவர்தன நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கமையவே ,உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.