புகையிரதம் – யானை விபத்தை தவிர்க்கும் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது…

காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுகின்றமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இந்த அனர்த்தங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் ஊடகங்களிடம் தெளிவுப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரதங்களில் காட்டு யானைகள் மோதுகின்றமைக்கான 18 காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அதனை தடுப்பதற்கான 19 யோசனைகளையும் குறித்த குழு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடத்திலேயே, அதிகளவான காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.