தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக் காலத்தினை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானம்…

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக் காலத்தினை தொடர்ந்தும் நீடிக்க சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நேற்று(25) மாலை ஒன்று கூடிய அரசியலமைப்பு சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை, 80 வயது வரை நீடிக்க அரசமைப்பு பேரவையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுவில் வெற்றிடம் நிலவுவதனால், சேவைக்காலத்தை நிறைவுச் செய்திருப்பவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இதன்மூலம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறியினும் இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் ​மேற்கொள்ளவுள்ளதாக, அரசமைப்பு பேரவை குறிப்பிட்டுள்ளது.