பாதையில் ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கையுடனான தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து அணியின் விசேட விக்கெட் காப்பாளரான ஜொனி பிஸ்ட்ரோ இற்குப் பதிலாக சர்ரே பிராந்திய அணியின் வீரர் பென் பொக்கீஸ் குழாமிற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மோதவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியானது நவம்பர் 06ம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.