சற்று முன்னர் தெமடகொட பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் ஏற்பட்ட பதற்றம் நிலையினை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில், ஆர்இ.ஏ.ராஜபக்ஷ எனும் குருணாகல் பகுதியை சேர்ந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றைய நபர் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.