Update – புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்…

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 26ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.