எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க அவரது தீர்மானத்தினை மாற்றிக் கொண்டுள்ளார்.
அதன்படி, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளார் என தெரிய வருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் அவரது தீர்மானத்தினை மாற்றிக் கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
