நாட்டில் நிலவும் அரசியல் சர்ச்சைகளை வெறுமனே கருத்திற் கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தச் சந்தர்ப்பத்தில், பொருளாதார அபிவிருத்திக்காக கடமைகளை சரிவர ஆற்றுமாறு அரச உத்தியோகத்தர்களிடம் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் அமைதியாகவும் அதேபோன்று பொறுப்புடனும் செயற்படுமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, சட்டவிரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.