வடிவேல் சுரேஷ் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு…

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று(28) இவர் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் அவர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.