மத்தேகொட வங்கிக் கொள்ளை – நான்கு பேர் கைது…

கடந்த 26ம் திகதி மத்தேகொட பிரதேசத்தில் உள்ள அரச வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வங்கியின் சிசிடிவி கெமரா கட்டமைப்பை களனி கங்கையில் வீசுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் சமிந்த சம்பத் குமார என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபர் ஒருவரின் வீட்டு முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த 90 இலட்சம் ரூபா பணமும் 493 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.