எரிபொருள் விலைச் சூத்திரத்தில் மாற்றம்..

எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றம் செய்யப்படும் என பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(31) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.