உங்கள் பற்கள் மஞ்சளாக இருந்தால் அது உங்களுக்கு ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்தி விடும். இப்படி பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
லெமன், மஞ்சள் மற்றும் உப்பு:
மஞ்சள் கிழங்கை இலேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். ஒரு பெளலில் 1 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் சில துளிகள் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து அந்த பேஸ்ட்டை கொண்டு பற்களில் அப்ளே செய்யுங்கள். சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 3 தடவை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள், தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா:
4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, 2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா, 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை ஒரு சுத்தமான பெளலிற்கு சேர்த்து கலந்து கொள்ளவும். முதலில் 2-3 நிமிடங்கள் பற்களை நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். பிறகு இந்த மஞ்சள் கலவையை கொண்டு வாயை கொப்பளியுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். ஒரு வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால் பற்கள் சீக்கிரம் வெண்மையாகும்.
மஞ்சள், கடுகு எண்ணெய் மற்றும் உப்பு:
ஒரு சுத்தமான பெளலில் 1 டீ ஸ்பூன் கடுகு எண்ணெய், உப்பு, 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை டூத் பேஸ்ட் மாதிரி பயன்படுத்தி வாருங்கள். சில நிமிடங்கள் வரை தேய்க்கவும். இதை வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
மஞ்சள் மற்றும் வெண்ணிலா எஸன்ஸ்:
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சில துளிகள் வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து பல் தேயுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைக்கு பை பை சொல்லி விடலாம்.