கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பியல் நந்தன திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க இன்று(01) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபரின் சட்டத்தரணி முன்வைத்த பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குக் கிடைக்க வேண்டிய முதல் கொடுப்பனவான 5 .5 மில்லியன் அமெரிக்க டொலர்களை தனியார் வங்கிக் கணக்கில் வைப்பிலிட ஆலோசனை வழங்கியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.