ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் 08 ஆம் திகதி…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை மற்றும் மத்திய செயற்குழு எதிர்வரும் 08 ஆம் திகதி கூட்டுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது புதிய அரசாங்கம் மற்றும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றிரவு(01) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.