சர்கார் சிறப்பு காட்சிக்கு தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படம் சிறப்பு காட்சிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார் படம் தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி வெளியாகிறது.

தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் படங்களை கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ, அதிக விலைக்கு டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் தெரிவித்து இருந்தார்.

இதை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தடைவிதித்து உத்தரவிட்டது.