பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட போதிலும், அலரிமாளிகையில் இருந்து வெளியேறாது, அரச சொத்துக்களை முறைகேடாக பாவித்தல் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பினால் இன்று(02) ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முறைப்பாடு ஒன்று செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரச சொத்துக்களை முறைகேடாக பாவித்தல் சட்டத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.