உர வகைகளை தட்டுப்பாடின்றி வழங்க தீர்மானம்…

பெரும் போகத்தில் நெல் உற்பத்தி உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளுக்கு தேவையான உர வகைகளை தட்டுப்பாடின்றி கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை வழங்கியுள்ளார்.

இம்முறை பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட உர வகைகள் 150,000 டொன் ஆகும், இவை உள்ளிட்ட ஏனைய உர வகைகளுக்கும் அரசாங்கம் ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யூரியா 50 கிலோகிராம் எடை கொண்ட பொதி 500 ரூபாவிற்கும் ஏனைய உர வகைகளை அதாவது 50 கிலோகிராம் எடை கொண்ட பொதி 1000 ரூபாவிற்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தின் காரணமாக உரத்திற்கான கோரிக்கை அதிகரிக்க கூடும். இது தொடர்பில் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.