கொம்பனி வீதி, ஹைட் பார்க் கோர்ணர் (Hyde park corner) வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்டிடம் ஒன்றின் பணிகளுக்காக பொருத்தப்பட்ட கிரேன் இயந்திரத்தை அகற்றும் நடவடிக்கை காரணமாகவே வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இன்று(03) பிற்பகல் 02.00 மணி முதல் இரவு 10 மணி வரையும், நாளை(04) அதிகாலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரையிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த காலப்பகுதியில், மாற்று வழிகளை சாரதிகள் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.