சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜ தந்திரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் சீன பிரதமர் லீ கிக்கியாங் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று(03) அந்நாட்டு பிரதமர் லீ கிக்கியாங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும், இரு நாட்டு பிரதமருக்கு இடையிலான சந்திப்பின் போது இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அத்துடன், பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களும் இன்று(03) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.