டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடம்பியல் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன இதனை தெரிவித்துள்ளார்.
நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 41 ஆயிரத்து 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு நோய் தொற்று தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது