கிரிக்கெட் வாரிய நிர்வாக சீர்திருத்தம் – லோதா கமிட்டி அவகாசம்

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டி கடந்த வாரம் அதிரடியான தீர்ப்பை வெளியிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான்ஸ் ராயல்ஸ் அணிகளுக்கு தலா 2 ஆண்டு தடை விதித்தது.

அத்தோடு குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட ஆயுள்கால தடை விதித்தது.

அதேநேரத்தில் கிரிக்கெட் வாரியத்தின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் சீர்திருத்தம் பற்றி லோதா குழு எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்தத்திற்கு தேவையான பரிந்துரைகளை செய்ய இன்னும் 5 மாத கால அவகாசம் தேவை என்று லோதா கமிட்டி கூறியுள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. லோதா கமிட்டிக்கு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

(riz)