பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று(05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட கலந்துரையாடல் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர்களை பொலிஸ் தலைமையாகத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபர் நேற்று(04) காலை உத்தரவிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் நேற்று(04) மாலை மீண்டும் பொலிஸ் மா அதிபரினால் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெறாது எனவும், குறித்த கலந்துரையாடலுக்காக வேறு தினத்தை விரைவில் வழங்குவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.