ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழப்பு…

ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளன. இதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில், இறந்த 12 குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள காபுலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.