பிரியாவிடைப் போட்டியில் ரங்கன ஹேரத் சாதனை…

இங்கிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டி மற்றும் தனது இறுதி சர்வதேச போட்டியில் ரங்கன ஹேரத் தனது 100 ஆவது சர்வதேச டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

இதில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டின் விக்கெட்டை ரங்கன ஹேரத் கைப்பற்றியபோது, அவர் காலி சர்வதேச அரங்கில் தனது 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் (எஸ்.எஸ்.சீ, காலி மற்றும் கண்டி அஸ்கிரிய மைதானங்களில்) மற்றும் ஜேம்ஸ் என்டர்சன் (லோர்ட் மைதானம்) ஆகியோர் குறித்த சாதனையினை தக்கவைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.