பேரூந்து கட்டணம் குறைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று…

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை அடுத்து, பேரூந்து கட்டணங்களை குறைப்பது குறித்த இறுதித் தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் பேரூந்து உரிமையாளர் சங்க உறுமையாளர்களுக்கும் இன்று(07) நடைபெறவுள்ளது.

இன்று(07) நடைபெறவுள்ள கலந்துரையாடலை அடுத்து எடுக்கப்படும் தீர்மானத்தை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 2 வீதத்தினால் பேரூந்து கட்டணத்தை குறைப்பதற்கு அகில இலங்கை தனியர் பேரூந்து உரிமையாளர்களின் சம்மேளம் தீர்மானித்துள்ளதாக அதன் பிரதம செயலாளர் அஞ்ஜன ப்ரியன்ஜித் குறிப்பிட்டுள்ளார்.

.